அசாம், மேற்கு வங்காள மாநிலங்களுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்
7 February 2021, 10:52 amஅசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் தேகியாஜுலி பகுதியில் 2 மருத்துவமனைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளுக்கான அசோம் மாலா என்ற திட்டம் ஆகியவற்றுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டுகிறார்.அதன்பின், மேற்கு வங்காளத்தின் ஹல்டியா நகருக்கு அவர் செல்கிறார். கியாஸ் சிலிண்டர் இறக்குமதிக்கான முனையம் ஒன்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தோபி-துர்காபூர் பகுதியில் பிரதம மந்திரி உர்ஜா கங்கா திட்டத்தில் இயற்கை வாயு பைப்லைன் பிரிவையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
0
0