கொரோனாவில் இருந்து அதிபர் டிரம்ப் விரைவில் குணம்பெற வேண்டும் : பிரதமர் மோடி விருப்பம்..!

Author: Babu
2 October 2020, 12:25 pm
Modi_Trump_UpdateNews360
Quick Share

டெல்லி : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் விரைந்து குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. இதுவரையில், அங்கு மட்டும் 74 லட்சத்து 94 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 660 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று தலைவிரித்தாடி வரும் நிலையில், அமெரிக்காவில் வரும் நவ.,3ம் தேதி அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அதிபர் டிரம்ப் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இதனிடையே, டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹிக்ஸிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் போட்டுள்ளார். அதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைந்து, மீண்டும் நல்ல ஆரோக்கியம் பெற விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 33

0

0