தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

7 May 2021, 1:56 pm
stalin - modi - updatenews360
Quick Share

முதலமைசசராக பொறுப்பேற்றுக் கொண்ட முக ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கொரோனா நிவாரண நிதியாக 2.76 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மே 16 முதல் அமல், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு புதிய துறை உருவாக்கம், நாளை முதல் நகரப் பேருந்துகளில் மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச பயணம் ஆகிய முக்கிய 5 கோப்புகளில் தனது முதல் கையெழுத்தை போட்டார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

இந்த நிலையில், முதலமைசசராக பொறுப்பேற்றுக் கொண்ட முக ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. முக. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 157

0

0