இந்த விஷயத்துல அலட்சியம் வேண்டாம்… அது கடினமும் அல்ல : ராமதாஸின் சூப்பர் ஐடியா…!!!
Author: Babu Lakshmanan12 August 2021, 11:15 am
பொதுமக்களின் அலட்சியதால் அழிந்து வரும் இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சியாக பாமக நிறுவனர் ராமதாஸ் சிறந்த ஐடியாவை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புவிவெப்பநிலை உயர்வு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதை முறியடிக்க நாமும் நம்மால் இயன்றதை செய்வோம். ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு மரக்கன்றை நட்டு, அதை பாதுகாப்பாக வளத்தெடுப்போம்! மரம் வளர்ப்பது கடினமல்ல… வனத்துறையினருக்கோ, தொண்டு நிறுவனங்களுக்கோ தொலைபேசி அழைப்பு செய்தால் அவர்கள் வீடு தேடி வந்து மரக்கன்றுகளை அளிப்பார்கள். அதை வீட்டுக்கு அருகில் நட்டு வளர்ப்பதை பயனுள்ள பொழுதுபோக்காக மாற்றிக் கொள்ளலாம்!
உங்கள் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் பிறந்தநாள் கொண்டாடும் போது அதன் அடையாளமாக அவர்களின் பள்ளிக்கூடத்திலோ, வீட்டுக்கு அருகிலோ ஒரு மரக்கன்றை நடலாம். இப்படியாக ஆளுக்கொரு மரம், ஆண்டுக்கொரு மரம் வளர்த்தால் இயற்கையை காக்க முடியும்! குழந்தைகள் நட்டு வளர்க்கும் மரங்களில் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பட்டயங்களை கட்டி வைத்தால் அவர்கள் இன்னும் ஆர்வம் மற்றும் பொறுப்புடன் மரங்களை வளர்ப்பார்கள். தைலாபுரம் பள்ளியில் இத்திட்டத்தை நாங்கள் வெற்றியாக செயல்படுத்தியுள்ளோம்!,” எனக் குறிப்பட்டுள்ளார்.
0
0