வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி சென்னையை முற்றுகையிடும் பாமகவினர் : ரயில் மீது கல்வீசியும் தாக்குதல்

1 December 2020, 10:57 am
pmk protest - updatenews360
Quick Share

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னை நோக்கி படையெடுக்கும் பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், இதனை வலியுறுத்தி பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளில் சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள சென்ற பாமகவினரை டிஐஜி சாமுண்டேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆங்காங்கே சாலை மறியல் நடத்தினர். மேலும், வண்டலூர் ரயில் நிலையத்திற்குள் புகுந்த பாமகவினர், ஓடிக்கொண்டிருந்த விரைவு ரயில் மீது கற்களை எடுத்து வீசினர். இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பதட்டம் ஏற்பட்ட காரணத்தினால் சாலை மறியல் மற்றும் ரயில்களில் கல் எறிதல் சம்பவத்தை நடத்திய பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாமகவினர் நடத்திய சாலை மறியலால் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதித்தது. சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் இதர பணிகளுக்காக செல்பவர்களும் சுமார் 3 மணி நேரம் சாலையிலேயே காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. ரயில் மீது கற்களை வீசிய காரணத்தினால் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் போன்ற ரயில்வே நிலையங்களில் அதிக பாதுகாப்பை ஏற்படுத்த தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

Views: - 0

0

0