அவங்களையே காலி பண்ணிய கொரோனா…! அப்ப நாம..? டாக்டரின் அதிரடி டுவீட்

27 March 2020, 11:33 am
corona-lucknow-updatenews360
Quick Share

சென்னை: அமெரிக்காவுக்கே  இந்த நிலை எனும் போது நமது நிலை? விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம் என்று எச்சரித்து இருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

சீனாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 24000 பேரை பலி வாங்கி இருக்கிறது கொரோனா. இன்னும் படுவேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது.

இந் நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட நிலைமையை சுட்டிக்காட்டி, நாமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இது குறித்து டுவிட்டர் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:  உலகின் ஈடு இணையற்ற வல்லரசான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று ஒரே நாளில் 17,507 பேரை கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருக்கிறது.

நேற்று ஒரு நாளில் மட்டும் 256 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது.

சீனாவில் இதுவரை 81,285 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 85,268 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கே  இந்த நிலை எனும் போது நமது நிலை? எனவே விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply