ஊரே கொரோனா…! மசூதியில் இவங்க பண்ணிய காரியம்..! உதைத்த போலீஸ்

27 March 2020, 11:10 am
Quick Share

பெங்களூரு: கர்நாடகாவில், ஊரடங்கு தடையை மீறி மதவழிபாடு நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவையும் விட்டு வைக்க வில்லை. சமூக தனிமைப்படுத்துதலே இந்த வைரஸ் பரவலை தடுக்கும் வழியாக இருக்கிறது.

இதை பின்பற்றாத இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகள் பெரும் உயிரிழப்புகளை இப்போது சந்தித்து வருகின்றன. எனவே, தான் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த எச்சரிக்கையை மீறி ஒன்றுகூடி பொறுப்பில்லாமல் மக்கள் நடந்து கொண்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி இருக்கிறது. பெல்காம் பகுதியில் உள்ள மசூதியில் மக்கள் பெருமளவில் ஒன்று கூடி வழிபாடு நடத்தி இருக்கின்றனர்.

Courtesy: ANI

இதையறிந்த போலீசார், அங்கு உடனடியாக சென்று கூடியிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து உள்ளனர். கொரோனா பற்றிய போதிய விழிப்புணர்வு, பொறுப்பின்றி மக்கள் செய்யும் இதுபோன்ற காரியங்கள், பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கவலை கொள்கின்றனர்.

Leave a Reply