அண்ணாமலை, கர்னல் பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு : பேரணியால் வெடித்த சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 11:49 am
Annamalai Karnal Pandian - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபுவை திமுக கவுன்சிலர் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து திமுக மீது கடும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

முன்னாள் ராணுவ வீரர்கள் தலைமையில் சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரு.நாகராஜன் தலைமையில் பேரணி நடந்தநிலையில் 3,500 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே நேற்று பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ராணுவ வீரருமான கர்னல் பாண்டியன், குண்டு வீசவும் தெரியும் , சண்டை போடவும் தெரியும் என பேசியிருந்தார்.

இந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாக கர்னல் பாண்டியல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்,.

Views: - 331

0

0