காவலர்களுக்கு இனி வாரவிடுமுறை… முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பால் நிம்மதியில் காவல்துறை..!!

Author: Babu Lakshmanan
3 November 2021, 1:24 pm
police leave - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சுழற்சி முறையில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு நிகழ்ச்சிகள், முக்கிய தினங்களில் அசம்பாவீதம் நிகழாமல் இருக்க, விடுமுறையின்றி அவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக கூறப்பட்டது. இதனிடையே, பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நாட்களில் காவலர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு, காவலர்களுக்கு இனி வார விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படுவதற்கான அரசாணையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும் என்றும், தங்கள் உடல்நலனை பேணி காக்கவும், குடும்பத்துடன் போதிய நேரத்தை செலவிடவும் இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 474

0

0