‘உள்ளாடையுடன் போட்டோ அனுப்பு’: செல்போனில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு…!!

By: S
14 October 2020, 3:41 pm
christ case2 - updatenews360
Quick Share

சென்னை: மாணவிகளுக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி மாணவிகளுக்கு கிறிஸ்தவ அமைப்பின் ஊழியர்கள் இருவர் செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோஷுவா கிருபாராஜ் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், ஸ்கிரிப்சர் யூனியன் அண்ட் குழந்தைகள் ஸ்பெஷல் சர்வீஸ் மிஷன் கவுன்சில் மூலம், கிறிஸ்துவ போதனைகளை பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறோம். இதற்காக சாமுவேல் ஜெய்சுந்தர் என்பவரை 1.4.2003-ல் ஊழியராக நியமித்தோம். பதவி உயர்வு பெற்ற அவர், ஆங்கிலத்துறையின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். நாடு முழுக்க பல்வேறு ஊர்களிலும் சாமுவேல் ஜெய்சுந்தர் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் மற்றும் அவருடைய தந்தை என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது எங்களின் ஊழியர் சாமுவேல் ஜெய்சுந்தர், மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசமான மெசேஜ்கள் அனுப்பியதாக புகாரளித்தனர். அந்த இளம்பெண்ணும், அவரின் தந்தையும் கூறிய தகவலின்படி விசாரணை மேற்கொண்டதில், அது உண்மை என்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சாமுவேல் பள்ளிகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து, பள்ளி மாணவிகளோடு அவர் பேசவும் தடைவிதித்துவிட்டோம். சாமுவேல் ஜெய்சுந்தரைப்போல எங்களின் மற்றோர் ஊழியர் ரூபன் க்ளமென்ட் என்பவரும் சமூக வலைதளங்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேரையும் அக்டோபர் 5-ம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்துவிட்டோம் என்ற தகவலை தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமெண்ட் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 60

0

0