‘இவர்தான் ரியல் ஹீரோ’ : வழிப்பறி கொள்ளையர்களை துரத்திப் பிடித்த காவலருக்கு குவியும் சல்யூட்…!! (வீடியோ)

28 November 2020, 12:13 pm
police cctv - - updatenews360
Quick Share

சென்னையில் செல்போனை பறித்துச் சென்ற வழிப்பறி கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னையில் நடந்து செல்பவர்களின் நகைகள் மற்றும் செல்போன்களை, இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் வழிப்பறி செய்யும் சம்பவம் சர்வ சாதாரணமாக அரங்கேறி வந்தது. எனவே, இதனை தடுக்க காவல்துறையினரும் தனிப்படை அமைத்து ரோந்து பணிகளை மேற்கொள்வதுடன், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தியுள்ளனர். இதனால், கடந்த சில மாதங்களாக வழிப்பறி சம்பவம் வேரறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்திருந்த 2 பேர் செல்போனை பறித்து விட்டு, புயல்வேகத்தில் அங்கிருந்து சென்றனர்.

இதனைப் பார்த்த மாதவரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ், தனிநபராக தனது இருசக்கர வாகனத்தில் அவர்களை துரத்திச் சென்று மடக்கினார். அப்போது, ஒருவன் தப்பிச் செல்ல, மற்றொருவன் வாகனத்தை திருப்பிக் கொண்டு எஸ்கேப்பாக முயன்றான். அப்போது, தனது வாகனத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு, அந்த நபரை கட்டியாக பிடித்து, வாகனத்தில் இருந்து கீழே இழுத்து போட்டதுடன், காவல் உதவி ஆய்வாளர் ரமேஷும் கீழே விழுந்தார். பின்னர், உடனடியாக எழுந்து துணிச்சலுடன் அந்த கொள்ளையனை பிடித்தார்.

உதவி ஆய்வாளர் ரமேஷின் இந்த வீரதீர செயல் அங்கிருந்து சிசிடிவியில் பதிவானது. “உண்மையான கதாநாயகன்”, என அவரை சென்னை மாநகர காவல் ஆணையர் பாராட்டியுள்ளார். மேலும், இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், இது ரீல் அல்ல ரியல் என கேப்சன் போட்டுள்ளார்.

காவல்துறையை கடுமையான விமர்சித்து வருபவர்களிடையே, காவல்துறை உங்கள் நண்பன், எந்த நேரத்திலும் உங்களுக்காக தன்னலமற்று உழைப்பவன் என்பதை உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ் செய்த செயல் காட்டியுள்ளது.

Views: - 0

0

0