வாடகை கொடுக்க முடியாமல் தலைமறைவானவனுக்கு 2 சொகுசு பங்களா எப்படி..? மதனால் ஏமாந்தவர்கள் புகார் அளிக்க ஏற்பாடு..!!

19 June 2021, 12:20 pm
madhan op arrest - updatenews360
Quick Share

பெண்களை குறிவைத்து ஆன்லைன் விளையாட்டில் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் மதனால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண்களை தனது ஆபாச சேட்டிங்கால் கவர்ந்து, இச்சைகளை தீர்த்துக் கொண்டதாக எழுந்த புகாரால் யூடியூபர் மதன் என்பவன் போலீசாரின் பார்வையில் சிக்கியுள்ளான். பப்ஜியை யூடியூபில் ஸ்டீரிம் செய்து பெண்களுடன் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரச் செய்து நிர்வாண புகைப்படங்களையும், வீடியோ கால்களையும் செய்து பலரின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், பேடிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வழிகளில் ஆயிரக்கணக்கிலான ரூபாயை சம்பாதித்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

யூ டியூப் மதன் ஆன்லைன் விளையாட்டின் போது கெட்ட வார்த்தை பேசிய வீடியோக்கள், பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோக்கள், மற்ற பெண்களுடன் தனியாக ஆபாசமாக பேசிய வீடியோக்கள் என அனைத்தும் தற்பொழுது சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், நேரில் ஆஜராகுமாறு போலீசார் மதனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், ஆஜராகாமல் தலைமறைவான மதன், இந்தியாவிலேயே அதிக பணம் கொட்டும் சேனலை நடத்தும் எனக்கு எப்படி சட்ட நடவடிக்கைளை எதிர்கொள்ள வேண்டும் என தெரியும் என்று திமிராக பேசினார்.

இதனிடையே, மதன் நடத்தும் யூடியூப் சேனலின் அட்மினாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேவேளையில், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த மதனை போலீசார் இன்று தருமபுரியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது, தான் செய்தது என்றுக் கூறி போலீசாரின் காலில் விழுந்து மதன் கதறிய சம்பவங்களும் நடந்துள்ளன.

மேலும், மதனுக்கு சொந்தமான 2 ஆடி கார்கள் மற்றும் 2 சொகுசு பங்களாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் ரூ.4 கோடி இருப்பதாகவும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தலைமறைவான மதனுக்கு, எப்படி 2 சொகுசு பங்களாக்கள் வாங்க முடிந்தது என்ற கேள்வி போலீசாரிடம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், யூடியூபர் மதனை நம்பி பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் போலீசார் அறிவித்துள்ளனர். அதாவது, ரூ.5,000 ஏமாந்து இருந்தாலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ‘ப‌ப்ஜி’ மதனிடம் கைப்பற்றப்பட்ட 3 டேப்லட்களில் இருந்த 700 வீடியோக்கள் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வீடியோக்கள் முடக்கப்படும் என தெரிகிறது.

Views: - 234

0

0