போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 43 ஆயிரம் முகாம்கள் அமைப்பு..!!

31 January 2021, 7:54 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது.

இதேபோல் பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும், போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Views: - 0

0

0