கருணாநிதிக்கும் – ஸ்டாலினுக்கும் நிழலாக இருந்தவர்… புகழ்ந்த அரசியல் கட்சிகள்… பூரித்துப் போன துரைமுருகன்!!!
Author: Babu Lakshmanan23 August 2021, 12:55 pm
மூத்த அரசியல் தலைவரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனை ஆளும் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் புகழ்ந்து பாராட்டி பேசினர்.
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்று மீண்டும் கூடியது. அடுத்த மாதம் 17-ந்தேதி வரை துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
முதல் நாளாக இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக, நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது மு.க. ஸ்டாலின் பேசுகையில், “துரைமுருகன் சட்டப்பேரவையின் நூற்றாண்டு நாயகன். அவர் எனக்கு வழிகாட்டியாக உள்ளார். கலைஞர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருந்தவர். எந்தத்துறை கொடுத்தாலும், அதில் முத்திரை பதிப்பார்,” என பாராட்டி பேசினார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளாக அனைவரது மனதையும் கவர்ந்தவர்
துரைமுருகன். சூடாக பேசுவார், உடனே அடுத்த விநாடியே இனிமையாக பேசும் ஆற்றல்
கொண்டவர் துரைமுருகன். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருப்பவர் துரைமுருகன்,” எனக் கூறினார்.
0
1