கொரோனாவுக்கு பலியான முன்னாள் அமைச்சர்…! இது புதுச்சேரி சோகம்

12 August 2020, 6:44 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலை உயிரிழந்தார்.

53 வயதான ஏழுமலைக்கு சில நாட்களாக தொடர்ந்து உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மூச்சுத்திணறலும் ஏற்பட உடனடியாக அவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த தகவலை சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநர் எஸ் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

1998ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் ஊசுடு தொகுதியில் தமாகா சார்பில் ஏழுமலை வென்றார். 2001ல் நடந்த தேர்தலில், உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 2006ம் ஆண்டு தேர்தலில், சுயேட்சை எம்எல்ஏவாக ஆனார்.

பின்னர் காங்கிரசுக்கு ஆதரவு தந்து, பாசிக் சேர்மன் பதவியை பிடித்தார். காங். தமக்கு ஆதரவளித்து வாய்ப்பு தரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் சீட் கிடைக்காததால் திமுகவில் சேர்ந்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து 2011ல் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்தார்.

Views: - 12

0

0