நிவர் புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்..!!

24 November 2020, 12:55 pm
pondy - updatenews360
Quick Share

புதுச்சேரி : நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 630 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த நிவர் புயல் நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடுமையான பாதிப்பு ஏற்பட உள்ளது.

எனவே, இந்த புயலால் பாதிப்புகள் ஏற்படக் கூடிய மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக, புதுச்சேரி அரசுகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால், இன்று முதல் 26ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார். இந்த சமயங்களில் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 0

0

0