புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் : 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

Author: Babu Lakshmanan
22 September 2021, 2:07 pm
Quick Share

10 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் பற்றி இன்று அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக அக்டோபர் 21ம் தேதி காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக அக்டோபர் 25ம் தேதி புதுச்சேரி, உழவர்கரையிலும், 3ஆம் கட்டமாக அக்டோபர் 28ம் தேதி கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 30ல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 279

0

0