என்.ஆர். காங்சிரஸை இழுக்க முயற்சிக்கும் மக்கள் நீதி மய்யம் : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்… பரபரப்பில் பாஜக, திமுக…!!!

5 March 2021, 7:57 pm
Kamal - rangasamy - updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தமிழகத்துடன் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில், திமுகவுடனான உறவும் முறிந்து விட்டது. எனவே, என்ஆர் காங்கிரசும், பாஜகவும் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தது.

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், பாஜக இதற்கு பிடிகொடுத்தபாடில்லை. இதனால், இருகட்சிகளிடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பாஜக தரப்பில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி நீடித்து இருப்பதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் – மக்கள் நீதி மய்யம் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் மக்கள் நீதி மய்யம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன. பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், மநீம நிர்வாகிகள் சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேவேளையில், என்ஆர் காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருந்த திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 20

0

0