எஸ்பிபி குணமடைய புதுச்சேரி முதலமைச்சர் வாழ்த்து…! பிரார்த்தனையில் தாமும் இணைவதாக டுவிட்டர் பதிவு
18 August 2020, 11:00 amபுதுச்சேரி: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் நலமாக இருப்பதாக அவரே வீடியோ வெளியிட்டார்.
பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் எஸ்பிபி சரண் கூறி உள்ளார்.
ஆனால் எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கடவுளை வேண்டி வருகின்றனர்.
இந் நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காக பிரார்த்தித்து வரும் லட்சக்கணக்கான மக்களுடன் தாமும் இணைவதாக நாராயணசாமி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.