ஸ்டாலினை தொடர்ந்து மம்தா கட்சியிலும் அதிகரித்த உட்கட்சி பூசல் … பிரசாந்த் கிஷோரால் வந்த வினை…!!

24 November 2020, 9:18 pm
mamata - stalin - updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முதல்முறையாக முக ஸ்டாலின் தலைமையில் எதிர்கொள்ளும் திமுகவிற்கு, தேர்தல் நிபுணராக பீகாரைச் சேர்ந்த பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகிகளின் ஆலோசனைக் கேட்காமல், பிரஷாந்த் கிஷோரின் ஐடியாக்களை மட்டும் ஸ்டாலின் கேட்டு நடப்பது அக்கட்சியின மாவட்டச் செயலாளர்கள் உள்பட உயர்மட்ட நிர்வாகிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ அன்பழகன், ஐபேக் நிறுவனத்திற்கு எதிராக அக்கட்சியின் தலைமையிடம் நேரடியாக குரல் கொடுத்தார். இருப்பினும், பிற தலைவர்களும் மறைமுகமாக ஸ்டாலினிடம் எடுத்துரைத்து வருகின்றனர். ஆனால், அவர் கண்டுகிட்ட பாடில்லை. இதனால், கட்சியின் அதிருப்தி நிர்வாகிகளையும், பிகே வின் ஐபேக் நிறுவனத்தையும் ஒரு சேர கொண்டுசெல்வதே, ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக இருந்து வருவதாக அக்கட்சியினரே தெரிவித்து வருகின்றனர்.

stalin-prasanth-kishore-updatenews360

தமிழகத்தை போலவே மேற்கு வங்கத்திலும் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார். அங்கும் இதே கூத்தை அவர் நிகழ்த்தியுள்ளார். இவரது ஆலோசனையின் பேரில், மூத்த நிர்வாகிகள் என்றுகூட பாராமல், அவர்களை ஒதுக்கி வைப்பது, பதவி பறிப்பது போன்ற நடவடிக்கைகளை மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ளார். இதனால், திரிணாமூல் கட்சியிலும் பிரசாந்த் கிஷோருக்கு எதிராக எதிர்ப்பு அலைகள் வீசின. கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே ஐபேக் நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Mamata_Banarjee_Updatenews360 (2)

மம்தாவுக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் என பலரும் நிலைப்பாடு கொண்டுள்ள நிலையில், அவர்களில் முக்கியமானவர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி. இவருக்கு 18 மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளது. அவரது ஆதரவாளர்களை மாற்றியதால் சுவேந்து அதிருப்தியில் உள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்து விலகியதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. எனினும், கட்சிக்குள் எந்த பிரச்சனை இல்லை என திரிணாமூல் கட்சியினர் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

Suvendu-Adhikari - updatenews360

இருப்பினும், சுவேந்து அதிகாரி இப்படி நடந்து கொள்வதற்கு பின்னணியில் பாஜக இருப்பதே காரணம் என்றும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஒருவேளை சுவேந்து பாஜகவில் இணைந்தாலோ அல்லது தனிக்கட்சி தொடங்கினாலோ மம்தா பானர்ஜிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும். சட்டப்பேரவை தேர்தலில் மம்தா கட்சியை விட பாஜக குறைந்த இடங்களே பெற்றிருந்தாலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே அதிக இடங்களை கைப்பற்றியது. எனவே, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அலை வீசும் என்றே தெரிகிறது.

இனியும் பிரசாந்த் கிஷோரின் பேச்சை கேட்டு பாகுபாடு காட்டினால், ஆட்சிக் கட்டிலில் இருந்து மம்தா இறக்கப்படுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 21

0

0