மோடியை வேண்டுமானால்… ஆனால் பாஜகவை அசைக்கவே முடியாது : 10 ஆண்டுகளுக்கு அவங்கதான் : சரண்டரான PK…!!

Author: Babu Lakshmanan
28 October 2021, 2:06 pm
Prashant-Kishor-PM-Rahul - updatenews360
Quick Share

இந்திய அரசியலில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாஜகதான் ஆதிக்கம் செலுத்தும் என்று காங்கிரஸ் அரசியல் ஆலோசகர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. இருமுறையும் பிரதமராக நரேந்திர மோடியே இருந்து வருகிறார். எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, அரசியல் கட்சிகள் தற்போதில் இருந்தே தயாராகி வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் எதிர்கட்சியினரை ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.

mamata - sonia -updatenews360

அதேவேளையில், 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் 2019ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. எனவே, இந்தத் தேர்தலில் எப்படியாவது மீண்டு வரவேண்டும் என்ற முடிவில் சோனியா, ராகுல் ஆகியோர் தீர்மானமாக இருந்து வருகின்றனர். அதன்படி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு மற்றும் விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை காங்கிரஸ் கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினருக்கு தேர்தல் மூளையாக செயல்பட்ட பிரசாந்த் கிஷோரை, கட்சியின் மூத்த நிர்வாகிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், அரசியல் ஆலோசகராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். அவரது அறிவுறுத்தலின்படியே, காங்கிரஸ் தற்போது செயல்பட்டு வருகிறது.

Prasanth Kishore 02 updatenews360

இந்த நிலையில், கோவா தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி, எதிர்கட்சியினரை அப்செட் அடையச் செய்துள்ளது.

அவர் பேசியதாவது ;- பிரதமராக இருக்கும் மோடியின் அதிகாரம் குறையக் குறைய பாஜகவும் மெல்ல சரியும் என்று ராகுல் காந்தி நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், அது எல்லாம் பழிக்காது. பாஜக வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும். அதாவது, கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் காங்கிரஸ் எப்படி இருந்ததோ, அப்படித்தான் தற்போது பாஜக திகழும். அனைத்திந்திய அளவில் 30% வாக்குகள் பெற்ற பாஜக அவ்வளவு சுலபத்தில் மறைந்து விடாது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் மோடியை தூக்கி எறிவார்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். மோடியை வேண்டுமானால் மக்கள் நிராகரிக்கலாம். ஆனால், பாஜகவை அசைக்க முடியாது.

காங்கிரஸ் கட்சியில் யாரிடம் பேசினாலும், இன்னும் கொஞ்ச காலம்தான் மோடி தூக்கி எறியப்படுவார் என்றே நினைக்கின்றனர். ஆனால் அது நடக்கப்போவதில்லை என்று தான் நான் ஐயமுறுகிறேன். பெட்ரோல், டீசல் விலைகள் உயர்கின்றன, அதிருப்திகள் இருக்கின்றன, ஆனால் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படவில்லையே. தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தான் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர். எஞ்சிய இரு பங்கு மக்கள் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர். இதுதான் காங்கிரஸின் வீழ்ச்சி. காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு குறைந்து வருகிறது. 65% வாக்குகள் உடைந்து பிரிந்து விட்டன, எனக் கூறினார்.

Views: - 230

0

0