போன வாரம் விஜயகாந்த்.. இந்த வாரம் பிரேமலதா..அடுத்தடுத்து கொரோனாவிடம் சிக்கும் தேமுதிக குடும்பம்..!

28 September 2020, 4:30 pm
Vijayakanth - updatenews360
Quick Share

சென்னை : ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவிக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தாக்கம் அதிகரித்து காணப்படும் கொரோனாவுக்கு, அரசியல் மற்றும் சினிமாவின் முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினருக்கு தொற்று ஏதும் தென்படவில்லை எனக் கூறப்பட்டு வந்தது.

விஜயகாந்தின் உடல்நலம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளரும், மனைவியுமான பிரேமலதா, தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையிலேயே இவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 6

0

0