புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா ஏற்பு : விரைவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்..!!
23 February 2021, 7:14 pmபுதுச்சேரி : பெரும்பான்மையை இழந்ததால் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.
அண்மையில் புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரு அமைச்சர்கள் உள்பட 3 காங்கிரஸ் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. ஆளுநர் உத்தரவின் பேரில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பும் தோல்வியை தழுவியது.
இதையடுத்து, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமி கொடுத்தார். அவரது ராஜினாமா கடிதம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சிகளும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால், அங்கு தேர்தல் நடந்து முடிவுகள் தெரியும் வரையில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
0
0