கார்கில் வெற்றி தினம்: ஜம்மு காஷ்மீர், லடாக்கில் குடியரசுத் தலைவர் 4 நாள் சுற்றுப்பயணம்..!!

Author: Aarthi Sivakumar
25 July 2021, 10:18 am
President_Ramnath_Govind_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: கார்கில் வெற்றி தினத்தையொட்டி கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மரியாதை செலுத்துகிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக இன்று புறப்பட்டுச் செல்லும் அவர் கார்கில் வெற்றி தினத்தையொட்டி லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவுச்சின்னத்தில் நாளை மரியாதை செலுத்துகிறார். ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 27ம் தேதி பங்கேற்கும் ராம்நாத் கோவிந்த், அதைத்தொடர்ந்து மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி காஷ்மீர் மற்றும் லடாக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

Views: - 227

0

0