புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி : குடியரசு தலைவர் புகழாரம்..!!

Author: Babu
2 August 2021, 8:20 pm
ramnath govind - updatenews360
Quick Share

சென்னை : தனது புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், ஜார்ஜ் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். அப்போது, இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைவதாகவும், உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என தமிழில் உரையாற்றினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது :- தமிழக சட்டமன்ற விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டமன்றம் மிகவும் சிறப்பான அமைப்பாக உள்ளது. தேவதாசி சட்டம் ஒழிப்பு போன்ற சிறப்பான சட்டங்களை நிறைவேற்றிய சபை இது. பதின்ம வயதிலேயே அரசியல் களம் கண்டவர் கலைஞர். தனது புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர். அவரது வாழ்க்கையை மக்கள் மற்றும் தேச நலனுக்காகவே கழித்தவர், என்று கூறினார்.

Views: - 270

0

0