பிரதமர் மோடி நாளை மறுநாள் ரூ.75 நாணயத்தை வெளியிடுகிறார்…!!

By: Aarthi
14 October 2020, 5:36 pm
modi - updatenews360
Quick Share

75 ரூபாய் நாணயத்தை நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்.

பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடனான இந்தியாவின் உறவை சிறப்பிக்கும் வகையில், ரூ.75 நாணயம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தை வரும் 16ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வலுவூட்டப்பட்ட 8 பயிர்களின் 17 வகைகளையும் 16ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 42

0

0