சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் தமிழில் தமிழில் பேசி அசத்திய பாரத பிரதமர் மோடி….!!

25 October 2020, 3:44 pm
ModiMannKiBaat - updatenews360
Quick Share

தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

புதுடெல்லி: பிரதமர் மோடி மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார்.

அப்போது, தமிழகத்தின் தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

அந்த உரையில் வணக்கம் நல்லா இருக்கீங்களா? என பேசிய பிரதமர் மோடி, நூலகம் நடத்தும் யோசனை எப்படி வந்ததும் எனவும் கேட்டறிந்தார்.

மேலும், அவரிடம் உங்களுக்கு என்ன புத்தகம் பிடிக்கும் என்பதையும் கேட்டறிந்தார். மேலும், ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசி அசத்தினார் பிரதமர் மோடி.

Views: - 22

0

0