சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த டெல்லி விவசாயிகள் போராட்டம்: முதன்முதலாக கருத்து தெரிவித்துள்ள உலக தலைவர்…!!

1 December 2020, 2:08 pm
canada pm - updatenews360
Quick Share

கான்பெர்ரா: டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்தை குறிப்பிட்டு கனடா பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று 6வது நாளாக நீடிக்கிறது.

Farmers_Protest_UpdateNews360

உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என டெல்லி விவசாயிகள் போராட்டத்தைக் குறிப்பிட்டு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 தினங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Farmers_Delhi_Protest_UpdateNews360

இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. நிலைமை கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். டெல்லி விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த முதல் உலகத் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார்.

Views: - 18

0

0