தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைப்பு : தமிழக அரசு

Author: Babu Lakshmanan
12 August 2021, 1:15 pm
Quick Share

சென்னை : தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த போது, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வந்தது. இதனால், பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் விதமாக, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. மேலும், அதற்கான கட்டணத்தையும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி, தீவிரமில்லாதா கொரோனா சிகிச்சைக்கு ரூ.3000 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7.500மும், கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டோருக்கான வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு ரூ.56,200ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.27,100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 289

0

0