அமைச்சர் உதயநிதிக்கு எதிராக டெல்லியில் போராட்டம்.. தமிழ்நாடு இல்லத்தை நோக்கி படையெடுத்த இந்து மதமார்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2023, 4:48 pm
Udhaya - Updatenews360
Quick Share

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக டெல்லியில் போராட்டம்.. தமிழ்நாடு இல்லத்தை நோக்கி படையெடுத்த இந்து மதமார்கள்!!!

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் , சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை டெங்கு, கொரோனா போல ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார். இவரது கருத்துக்கு தற்போது வரை எதிர்ப்புகள் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே, மத்திய அமைச்சர்கள் தொடங்கி, பிரதமர் மோடி வரையில் சனாதன எதிர்ப்புகள் குறித்து பேசினால் கடுமையான எதிர்விளைவுகள் வரும் என்ற அளவுக்கு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். பாஜக மட்டுமல்லாது, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்க்கனவே, உத்திர பிரதேசம், அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்து, அதன் பின்னர் அந்த தொகையை அதிகரிக்கவும் செய்து இருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு எதிராக காவல்துறையில் பல்வேறு புகார்கள் பதியப்பட்டுள்ளன. மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு எதிராக டெல்லியில் இந்து மதமார்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்திர பிரதேசம், ஹரியானவை சேர்ந்த இந்து மதமர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அமைச்சர் உதயநிதிக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், அவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர்.

Views: - 109

0

0