நம்ம கிட்ட இருக்கறது சொகுசு கார் தான்மா… இனிமேல் வெளியே அப்படி சொல்லாதே : மனைவிக்குப் புரிய வைத்த பப்ஜி மதன்..!!

Author: Babu Lakshmanan
6 August 2021, 6:02 pm
pubg madhn - updatenews360
Quick Share

நம்மிடம் இருக்கு இரண்டு கார்களுமே சொகுசு கார்கள் தான் என்று மனைவி கிருத்திகாவுக்கு பப்ஜி மதன் சொல்லி புரிய வைத்துள்ளார்.

யூடிப்பில் ஆபாசமாக பேசி பணம் சம்பாரித்ததாக பப்ஜி மதன் கடந்த ஜுன் 18ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த ஜுலை 6ம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில், சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா மற்றும் அவரது பெற்றோரும் நேரில் வந்திருந்தனர்.

அங்கு நீதிபதிகள் முன்பு பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா குழந்தையுடன் சென்று வாதிட்டார். “தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை என் கணவர் விளையாடவில்லை. சீன செயலி தடை செய்யப்பட்டிருப்பதால், கொரியா வெர்ஷன் கேமை அவர் விளையாடினார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு தவறு செய்யவில்லை,” என வாதிட்டதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து, பப்ஜி மதனை மீண்டும் சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்த போது, அறிமுக வளாகத்தில் மனைவியை சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டார்.

அப்போது, நாம் வைத்திருக்கும் இரு கார்களுமே சொகுசு கார்கள்தான் என்றும், இனி நம்மிடம் சொகுசு கார்கள் இல்லை என வெளியே சொல்லாதே என அறிவுறுத்தினார். மேலும், காவல் ஆணையர் அலுவலகத்தில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரை வழக்கறிஞர்களை வைத்து வெளியே எடுக்கவும் மனைவியும் கூறினார்.

Views: - 656

0

0