அது மதனின் குரல் அல்ல… சொகுசு கார் எங்க கிட்ட இல்ல… ஆடி கார் மட்டும்தான் இருக்கு : பப்ஜி மதனின் மனைவி பேட்டி…!!

6 July 2021, 2:20 pm
Quick Share

சென்னை : யூடியூப்களில் வெளியான ஆபாச பேச்சு மதனின் குரல் அல்ல என்றும், அது சித்தரிக்கப்பட்டது என்று பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

யூடியூப்பில் ஆபாசப் பேச்சுகள் பேசியதாக பப்ஜி மதன் மீது பல புகார்கள் வந்தன. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பப்ஜி மதனை தேடி வந்த நிலையில், தலைமறைவான மதன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தருமபுரியில் கைது செய்யப்பட்டான். இதனிடையே மதனின் யூடியூப் சேனல் நிர்வாகியாக இருந்த அவரது மனைவி கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளி வந்தார்.

Pubg Madhan - Updatenews360

மேலும் ஜாமீன் கோரி மதன் மனுதாக்கல் செய்து இருந்தார். நேற்று இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. தற்போது ஜாமீன் வழங்கினால் விசாரணை சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என காவல்துறை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மதனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதனிடையே, ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட புகார்களில் கைதாகி சிறையில் உள்ள மதன் மீது குண்டர் பாய்ந்தது. இதனால், அவரால் ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், யூடியூப்களில் வெளியான ஆபாச பேச்சு மதனின் குரல் அல்ல என்றும், அது சித்தரிக்கப்பட்டது என்று பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

Madhan - Updatenews360

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- என்னுடைய வங்கிக் கணக்கை அவருடைய யூடியூப் பக்கத்தில் இணைத்து இருந்ததால்தான் என்னை கைது செய்தனர். நான் அவருடன் சேர்ந்து பப்ஜி விளையாண்டது கிடையாது. என்னுடைய வாய்ஸ் கூட அதில் வந்தது இல்லை. தடை செய்யப்பட்ட விளையாட்டை எனது கணவன் மதன் விளையாடவில்லை.

பப்ஜி விளையாடி கடந்த 10 ஆண்டுகளாக சொத்து சேர்க்கவில்லை. ஆடி கார் மட்டுமே எங்களிடம் உள்ளது. என்னுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மதன் வைத்துள்ள யூடியூப் சேனல் மற்றும் சூப்பர் சாட் மூலம் மட்டுமே வருமானம் கிடைத்தது. மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன். அவர் பணமோசடி எதையும் செய்யவில்லை, சொத்துக்கள் வாங்கி குவிக்கவில்லை.

எங்கள் யூடியூப் சேனலை முடக்கியுள்ளதால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது; எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை, என தெரிவித்துள்ளார்.

Views: - 166

0

0