நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்த போலீசார்: பொதுமக்கள் பாராட்டு.!

19 July 2021, 7:34 pm
kumari police - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் குண்டும், குழியுமாக இருந்த சாலையை தனியொரு ஆளாக சீரமைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

குமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதியில் குண்டும் குழியுமாக சாலை பழுதடைந்து காணப்பட்டதால், பொது மக்கள் வாகனத்தில் செல்லும் போது மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனை கவனித்த போக்குவரத்து பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் ஆயுதப்படை காவலர் ஸ்ரீதரன் ஆகியோர் சேர்ந்து இன்று குண்டும் குழியுமான சாலையை கல் மற்றும் மண்ணால் நிரப்பி சரி செய்தனர். போலீசாரின் இச்செயலை அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Views: - 186

0

0