இனி சனிக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு: முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யும் சுகாதாரத்துறை அமைச்சர்…

24 August 2020, 8:29 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முதலமைச்சர் நாராயணசாமியிட பரிந்துரை செய்ய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிகையில், கடந்த 24மணி நேரத்தில் புதுச்சேரியில் 304 நபர்களுக்கும், காரைக்காலில் 31 நபர்களுக்கும், ஏனாமில் 10 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மேலும் 345 நபர்களுக்கு மாநிலத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது மருத்துவமனைகளில் 3,753 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 6,942 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றார் .

மேலும் புதுச்சேரியில் 5 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 164 ஆகவும் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 10859 ஆக உயர்ந்துள்ளதாக கூறிய அவர், புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரம் தோறும் செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் வாரத்தில் இரு நாட்களாவது முழு ஊரடங்கு அமல்படுத்த முதலமைச்சர் நாராயணசாமியிடம் பரிந்துரை செய்ய உள்ளதாகவும், தற்போது செவ்வாய்கிழமைகளில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கிற்கு பதிலாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை முதலமைச்சர் அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா காரணமாக எதிர்பார்த்த வருவாயில் இருந்து 50% மட்டுமே வந்துள்ளது என்றும், 7 நாட்கள் ஊரடங்கை அறிவித்தல் அரசு நிவாரணம் அளிக்கும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அரசு செய்ய முடியாது சூழ்நிலையில் உள்ளது என்றும் விளக்கம் அளித்தார். மேலும் மத்திய அரசு இதுவரை புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை. எனவே தற்போது வாரத்தில் இரு நாட்கள் முழு ஊரடங்கை அமல் படுத்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், ஊரடங்கை அமல் படுத்தினால் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Views: - 30

0

0