தந்தையை கொன்ற தாயை தலை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்த மகன் : பின்னணியில் பகீர்… நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு

Author: Babu Lakshmanan
1 October 2021, 8:15 pm
life sentence - updatenews360
Quick Share

புதுக்கோட்டை : சொத்து பிரச்சனைக்காக பெற்ற தாயை கொடூரமாகக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்தவர் திலகராணி (45). இவருக்கு 5 மகன் உள்ளனர். மதுவுக்கு அடிமையான தனது கணவனை கடந்த 2006ம் ஆண்டு கொலை செய்து சிறைக்கு சென்றார். கொலை செய்யும் போது, 5வது மகன் முத்து 4 மாத கருவாக வயிற்றில் இருந்து வந்தான். 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த திலகராணியுடன் மற்ற 4 மகன்களும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தனர்.

இதையடுத்து, மறவன்பட்டியில் உள்ள தனது கணவன் வாழ்ந்து வந்த வீட்டில் திலகராணியும், அவரது 5வது மகனும் வசித்து வந்தனர். அந்த வீடு மற்றும் சொத்துகளை பிரித்து தருமாறு மற்ற 4 மகன்களும் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு திலகராணி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டைக்கு செல்ல தனது 5வது மகன் முத்துவுடன், திலகராணி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மூத்த மகன் ஆனந்த் (26), தாய் என்று கூட பாராமல் திலகராணியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். பின்ன், தலையுடன் சென்று கறம்பக்குடி போலீஸில் சரணடைந்தார். அவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து, தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை அளித்தனர்.

Views: - 349

0

0