விஜயகாந்த் உடலை இராஜாஜி அரங்கில் வையுங்க.. மெரினாவில் அடக்கம் பண்ணுங்க : தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan28 December 2023, 7:54 pm
விஜயகாந்த் உடலை இராஜாஜி அரங்கில் வையுங்க.. மெரினாவில் அடக்கம் பண்ணுங்க ; தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!!
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது, அவரது உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல பாஜக தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அதோடு இன்று மாலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு அவர் ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே, ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடலை வைத்து, அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். விஜயகாந்த் அவர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி அவருக்கு மணிமண்டபம் கட்ட ஆவன செய்யவேண்டும். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் பல ஜாம்பவான்களின் உடல்கள் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்த் குடும்பத்தினர் விரும்பினால் அரவது உல் மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக அறிக்கை விட்டுள்ள அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது குடும்பத்தினர் அனுமதி பெற்று, அவரது பூத உடலை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். மேலும், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு உடனடியாக இடம் ஒதுக்கி, அவருக்கான மரியாதை செலுத்த முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தமிழக பாஜக சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.