பெண்களின் பெரிய ஆயுதமே கண்ணீரும், மௌனமும் தான்… அது 2024 தேர்தலில் எதிரொலிக்கும் ; மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கிருஷ்ணசாமி கருத்து..!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 5:01 pm
Quick Share

திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை என்றும், பெண்களின் பெரிய ஆயுதமே கண்ணீரும், மௌனம் தான், அது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. நீட்டிலிருந்து விலக்கு பெற எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் உரிமை தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தி உள்ளது. இது பெண்களை ஏமாற்றம் செயலாக உள்ளது. ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்ப தலைவிக்கு உரிமை தொகை கிடையாது என்பது நூற்றுக்கு 99 பேருக்கு இந்தத் தொகை சென்றடையாது என்பது தான் காட்டுகிறது. அவசர கோளத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டம்.

சொன்னதை செய்ய மாட்டோம் என்பது போல் தான் திமுக அரசு நடந்து கொள்வதாகவும், பெண்களின் பெரிய ஆயுதம் கண்ணீரும், மௌனம் தான். அது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதற்கு எதிராக புதிய தமிழகம் மிக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மேகத்தாட்டு அணை விவகாரத்தில் திமுக அரசு வெறும் வாய் சவுடாலாக மட்டுமே பேசி வருகிறது. திமுக அரசு ஆட்சியா..? மக்கள் நலனா..? என்று வரும் போதெல்லாம், மக்கள் நலன் மட்டுமே காவு கொடுக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு, காவிரி நீர் பங்கீடு என அனைத்து பிரச்சனைகளிலும் திமுக அரசு அவ்வாறே செயல்பட்டு வருகிறது. காவிரி நதி நீர் பங்கீட்டில் விவகாரத்தில் திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், காங்கிரஸ் கூட்டணி வேண்டும் என்பதற்காக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் திமுக சுயநலமாக செயல்ப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 351

0

0