குயின் தொடரை டி.வி.யில் ஒளிபரப்ப அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம்..!

12 September 2020, 5:50 pm
gvm-queen-updatenews360
Quick Share

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டகுயின் இணைய தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய குயின் என்னும் இணைய தொடரை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ஆனால், இந்த தொடரை எடுக்க எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை என்றும், எனவே, இந்த தொடரை தயாரிக்கவோ, வெளியிடவோ தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெ.தீபாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை எனக் கூறினர். மேலும், இந்த வழக்கு 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Views: - 0

0

0