காங்கிரஸ் கட்சிக்கு கூட்டுத் தலைமை தேவை இல்லை : ராகுலை தலைவராக்க விரைவில் தீர்மானம்… கேஎஸ் அழகிரி தகவல்..!!

Author: Babu Lakshmanan
21 March 2022, 7:49 pm
Quick Share

காங்கிரஸ் கட்சிக்கு கூட்டுத் தலைமை தேவை இல்லை என்றும், ராகுல் காந்தியை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்க தமிழக காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றவும் தயார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விச்சு என்கின்ற லெனின் பிரசாத், மாநிலத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோஸ்வா நவீன், மாநில முதன்மை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச்செயலாளராக இருந்த திருவெற்றியூர் எஸ் சுகுமாரன் அக்கட்சியிலிருந்து விலகி, வடசென்னை மாவட்ட தலைவர் எம் எஸ் திரவியம் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி முன்நிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருடன் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, அவருக்கு வட சென்னை மாவட்ட தலைவர் எம்எஸ் திரவியம் அடையாள அட்டை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், முருகானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், சென்னை மாவட்ட தலைவர்கள் டில்லிபாபு, நாஞ்சில் பிரசாத், எம்எஸ் திரவியம், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி பேசியது:- திருப்பூரில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள். காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது உண்மை. ஆனால், அது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதோ, இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதோ, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போதோ அல்ல. வி.பி.சிங் பிரதமராக இருந்த போது.

பாஜக வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் விபி சிங் பிரதமராக இருந்தபோது தான், காஷ்மீரிலிருந்து பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டனர். ஜக்மோகன் சிங் பாஜக பரிந்துரையின் பேரில் காஷ்மீர் ஆளுநர் ஆக காஷ்மீருக்கு நியமிக்கப்பட்டார். அவர் இருந்த போதுதான் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டனர். இப்படியிருக்கும் போது, காங்கிரஸ் கொண்டு தங்களை வெளியேற்றியதை என்று எப்படி கூற முடியும். இவர்கள் வரலாற்றைத் திரித்து எழுத பார்க்கின்றனர்.

பாசிஸ்ட்கள் தான் வரலாற்றை திருத்தி எழுதுவார். ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகள் வரலாற்றைத் திருத்தி எழுத நினைத்தது போல், மோடி வரலாற்றை திரித்து எழுத முயற்சிக்கின்றார். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியா. ஆனால், காஷ்மீர் பைல்ஸ் அதை குலைப்பதாக உள்ளது. பிரதமர் இத்திரைப்படத்தை வரவேற்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு கூட்டு தலைமை தேவையில்லை. ராகுல் காந்தி போன்ற இளம் தலைவர்கள் தான் தேவை.

7 ஆண்டுகள் காலம் ஆட்சியில் இல்லை என்றால், காங்கிரஸ் அழிந்து விடுமா..? மேலும்,
கூட்டு தலைமையை தாங்கள் ஏற்கவில்லை அப்படி சொல்பவர்கள் காங்கிரசுக்கு விரோதமானவர்கள் என கூறினார்.

G-23 என்று காங்கிரஸ் கட்சியில் ஒரு குழுவை அழைக்கிறார்கள் அவர்கள் கூட்டுத் தலைமை வேண்டும் என்று கூறுவதாக சொல்கிறார்கள். நான் கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் 2000 காங்கிரஸ் யாரிடம் பேசி இருப்பேன் அவர்கள் G23 என்றால் இவர்கள் G2000. இவர்கள் அனைவரும் ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கருத்து உடையவர்களாக உள்ளனர்.

பெரிய முதலாளிகள் மேயராகக்கூடிய இடத்தில் கும்பகோணத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் மேயராகிரார் என்றால், அது ராகுல் காந்தியால் மட்டுமே சாத்தியமானது.

மோடியுடன் சமரம் பேச தான்ஆட்கள் உள்ளனர். எதிர்க்கும் ஆற்றல் ராகுல்காந்திக்கு மட்டுமே உள்ளது. ராகுல் காந்தியை தான் தலைவராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அனுப்பவும் தமிழ்நாடு காங்கிரஸ் தயாராக உள்ளது.

7ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றால் காங்கிரஸ் அழிந்து விடுமா??? நிச்சயமாக இல்லை. படிப்பினைகளை கற்றுக்கொண்டு தவறுகளை சரிசெய்து கடின உழைப்பின் மூலம் மீண்டும் வருவோம். மேகதாதுவில் அணை கட்டுவது காவேரி ஒப்பந்தத்திற்கு எதிரானது. அங்கு உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்தாலும் தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது, என தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி என்பது ஒருவரை ஒருவர் நம்புவது தான். தேர்தலில் ஒரு சில இடங்களில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. கூட்டணி கட்சிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ள போது முதல்வர் அவர்கள் ஒரு பெரும் அறிக்கையை வெளியிட்டார். இந்த விஷயத்தில் முதல்வர் பிரச்சனையை தீர்த்து வைப்பார், என்றார்.

Views: - 792

0

0