கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு மட்டுமே ஒரே வழி : ராகுல் காந்தி யோசனை…!!

4 May 2021, 11:32 am
Rahul_Gandhi_UpdateNews360
Quick Share

சென்னை : இந்தியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், அதனை தடுக்க முழு ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வு என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்று 4 லட்சம் பேர் இந்த நோய் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல, பலி எண்ணிக்கையும் முன்பை விட உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பாதிப்புகளுக்கு ஏற்றவாறு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகின்றன.

மகாராஷ்டிரா, ஆந்திரா, டெல்லி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழுநேர ஊரடங்கு மற்றும் பகுதிநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பாதிக்கப்படாத வண்ணம், ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என்றும், கொரோனாவால் மக்கள் செத்து மடிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 64

0

1

Leave a Reply