ராகுல், பிரியங்கா திடீர் ஆவேசம் : அரசியல் லாபத்துக்காக டெல்லியில் போட்டா போட்டி!!

17 May 2021, 1:37 pm
Rahul - Updatenews360
Quick Share

தேசிய தலைநகர் டெல்லியை மையமாக வைத்து, சமீபகாலமாக அரசியல் நடத்துவதில் அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மிக்கும், தேசிய கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதை காணமுடிகிறது.

The victimhood of the Congress party

தற்போது நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. இரட்டை உருமாற்றம் பெற்ற வீரியம் மிக்க கொரோனா வைரஸ் தாக்குவதால் உயிர்ப்பலி அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த தொற்று தற்போது நகரங்களிலிருந்து கிராமப்புற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

இந்த பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தடுப்பு ஊசி செலுத்துவதை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம், 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து மாநில அரசுகள் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

ஆனால் நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடவேண்டும், மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Rahul tweets goodbye, Fadnavis takes monsoon break & guess who celebrated  India's WC win?

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், ‘மோடி அவர்களே! நமது குழந்தைகளின் தடுப்பூசிகளை நீங்கள் ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தீர்கள்?” என்ற கேள்வி இந்தியில் எழுப்பப்பட்டு இருந்தது.
இந்தப் போஸ்டர்கள் கருப்புநிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்களுடன் இடம் பெற்றிருந்தன.

17 Arrested Over Posters Against PM Modi In Delhi: Sources

இந்த போஸ்டரை அச்சிட்டது யார்? என்பது பற்றிய தகவல் அதில் இடம் பெற்றிருக்கவில்லை.
இதுபற்றி டெல்லி காவல்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்ததால் போலீசார் 25 பேரை கைது செய்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே பணம் வாங்கிக்கொண்டு போஸ்டர்களை ஒட்டிய கூலிக்கு வேலை பார்க்கும் நபர்கள் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை கடுமையாக விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா அந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் முகவரி படமாக்கி இருக்கிறார். இதேபோல் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை முகவரி படமாக்கி வைத்திருக்கிறார்.
மேலும் அவர் ஒருபடி சென்று “என்னையும் கைது செய்யுங்கள்” என்று ஆவேசமாக குறிப்பிட்டும் இருக்கிறார்.

இப்படி ராகுல் காந்தியும், பிரியங்காவும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஏற்கனவே ஒட்டிய போஸ்டர்கள் சட்டவிரோதமாக கருதப்பட்டு அதை ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அதே போஸ்டர்களை தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் முகவரி படமாக்கியிருப்பது, டெல்லி போலீசுக்கும், மத்திய அரசுக்கும் பலத்த சவால் விடுவதுபோல் அமைந்துள்ளது.

Priyanka Gandhi Vadra backs Rahul Gandhi's 'courageous decision'

கடந்த மாத மத்தியில் டெல்லி மாநில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அதை சமாளிக்க முடியாமல் கெஜ்ரிவால் அரசு திணறியது. “மத்திய அரசின் வஞ்சகத்தால் டெல்லி மக்கள் உயிரை இழக்கிறார்கள்” என்று ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் பிரதமர் மோடிதான் காரணம் என்பதுபோல் அவர் அலறினார்.

இந்நிலையில் மே முதல் வாரம் டெல்லி மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் சப்ளை இன்றி கொரோனா நோயாளிகள் 33 பேர் இறந்துபோக இதற்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் ஆவேசமாக முழங்கினார். இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த இந்த துயர சம்பவங்கள் சர்வதேச அளவில் எதிரொலித்ததால் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அரசியல் ரீதியாக சில அனுகூலங்கள் கிடைத்தன.

ஆனால், சில தினங்களுக்கு முன்பு, டெல்லி மாநிலத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய மருத்துவ ஆக்சிஜனை கெஜ்ரிவால் அரசு சரிவர கையாளவில்லை, வேண்டுமென்றே தினமும் எங்களுக்கு 700 டன் ஆக்சிஜன் தேவை என்று கேட்டு பெற்றுவிட்டு அதில் 110 டன்னை பயன்படுத்தாமல் அப்படியே வேறு சில மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதைபோல், இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு விவகாரத்தை அப்படியே மறந்துவிட்டு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தற்போது தடுப்பூசி பிரச்சினைக்குள் நுழைந்துவிட்டார்.

இதுவும் சர்வதேச அளவில் எதிரொலித்து பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படவேண்டும் என்பதுதான் கெஜ்ரிவாலின் அரசியல் திட்டம் என்கின்றனர்.

Its 'muscular' Narendra Modi versus 'accountable' Arvind Kejriwal in Delhi-  The New Indian Express

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்த மாநிலங்களில் நாங்கள் அவசர உதவிக்காக அனுப்பிவைத்த பல ஆயிரம் டன் ஆக்சிஜனை எப்படி பயன்படுத்தினீர்கள்? அதற்குரிய கணக்கை தணிக்கை செய்து அனுப்புங்கள் என்று மத்திய அரசு தற்போது கிடுக்குப்பிடி போட்டுள்ளது.

‘எங்கள் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது, உடனடியாக கொரோனா நோயாளிகளின் உயிர்களை காப்பாற்ற போதிய ஆக்சிஜனை அனுப்பி வையுங்கள்’ என்று நெருக்கடி கொடுத்த பல மாநிலங்கள், மத்திய அரசு முறைப்படி அனுப்பி வைத்த ஆக்சிஜனை முறையாக கையாளத் தெரியாமல் வீணடித்து இருப்பதுதான் இந்த கேள்விக்கு முக்கிய காரணம்.

இதற்கு பதிலளிக்கும்போது, கெஜ்ரிவால் அரசு ஆடிய நாடகம் வெளியுலகத்துக்கு தெரிய வந்துவிடும் என்பதால்தான் தற்போது அவருடைய அரசு இந்த விவகாரத்தை திசை திருப்பும் விதமாக தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினையை கையில் எடுத்துள்ளது என்றும் ஆனால் இந்த போஸ்டர் விவகாரத்தை, ஆம் ஆத்மி கையிலெடுக்கும் முன்பாக காங்கிரஸ் முந்திக்கொண்டு பிரச்சினையை எழுப்பிவிட்டது என்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து, பாஜகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “கொரோனா பரவல் காலத்தில் மக்களின் உயிர்களை காப்பாற்றுவது பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதிலேயே குறியாக இருக்கின்றன. இதில் முந்தி கொள்பவர்களுக்கு அரசியல் ரீதியாக லாபம் கிடைக்கலாம் என்று கருதி இப்படிப்பட்ட மோசமான நடவடிக்கைகளில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்போது மம்தாவும் ஆரம்பித்து விட்டார்.

India's BJP tells opposition to 'accept defeat with grace' - BBC News

இக்கட்சிகளின் தலைவர்கள் முதலில் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை மக்களிடையே கிளப்பிவிட்டனர். இதனால்தான் மக்கள் தடுப்பூசி போட முதலில் முன்வரவில்லை.
மனிதாபிமான அடிப்படையில்தான் ஏழை நாடுகளுக்கு, மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக அனுப்பி வைத்தது. முன்னேறிய நாடுகள் சிலவற்றுக்கு வர்த்தக ரீதியாகவும் வழங்கியது.

இது எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரிந்திருந்தும், வேண்டுமென்றே அரசியல் செய்கின்றன. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மத்திய பாஜக அரசு கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு
இன்னும் ஒரு சில மாதங்களில் தடுப்பூசி போடப்பட்டு விடும். ஆனால் மோடி அரசு பொறுமை காப்பதை எதிர்க்கட்சிகள் சீண்டிப் பார்க்கின்றன. தக்கநேரத்தில் அதற்கு பாஜக சரியான பதிலடி கொடுக்கும்” என்று பாஜகவின் அந்த நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.

Views: - 173

0

0