ராகுல் சரிப்பட்டு வர மாட்டார்..! மம்தாதான் பிரதமர் வேட்பாளர் : மல்லுக்கட்டும் திரிணாமுல் காங்.!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2021, 3:41 pm
Rahul Mamta -Updatenews360
Quick Share

காங்கிரஸுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. கடந்த 2 வருடங்களாகவே கட்சியில் அவ்வப்போது மாறி மாறி ஏதாவதொரு சோதனை ஏற்பட்டு சோனியாவையும், ராகுலையும் நிலைகுலைய வைத்து விடுகிறது.

2024ல் வெல்லப்போவது யார்?

எப்படியும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவரும் காங்கிரசுக்கு அடி மேல் அடி விழுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

assam assembly election 2021 latest news PM narendra modi rahul gandhi on caa issue - Assam assembly election 2021 : असम में आज आमने-सामने होंगे पीएम मोदी और राहुल गांधी - News Nation

நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா கடந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காணொளி வழியாக ஆலோசனை நடத்தினார்.

Sonia holds virtual meeting with leaders of 19 opposition parties | Sonia Gandhi| Congress| Opposition meeting

அதில் ஆம் ஆத்மி, பகுஜன்சமாஜ் தவிர அத்தனை எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன. அப்போது இதே ஒற்றுமை அடுத்து வரும் கூட்டத் தொடர்களிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் நீடிக்கவேண்டும் என்று சோனியா கேட்டுக்கொண்டார்.

சிதறிய எதிர்க்கட்சிகள்

அதை எதிர்க்கட்சித் தலைவர்களும் ஏற்றனர். சோனியாவும் உற்சாகம் அடைந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து ஒரு மாதம் முடிவதற்குள் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாக அத்தனை கட்சித் தலைவர்களும், ஆளுக்கு ஒரு திசையில் நடையைக் கட்டத் தொடங்கிவிட்டனர்.

காங்கிரசை எதிர்க்கும் திரிணாமூல் காங்.,

இதில் முதல் அணுகுண்டை காங்கிரஸ் மீது, வீசியது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்தான். இத்தனைக்கும் முதலமைச்சராக பதவியேற்ற பின்பு கடந்த மாதம் டெல்லிக்கு வந்த மம்தா, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து இருவரும் நீண்ட ஆலோசனையும் நடத்தினர். ஆனால் அதெல்லாம் சும்மா என்பதுபோல் தற்போது அரசியல் களம் பரபரப்பாக மாறிவிட்டது.

Mamata gets Chandipath flawless this time, in a year she has expanded her outreach to Hindus

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ நாளேடு ஜகோ பங்களா.

அதில் கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியையும், ராகுலையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தக் கட்சியின் தலைவர்கள் ராகுலை கிண்டல் செய்து பேசும் பேச்சுக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்படுகிறது.
குறிப்பாக ராகுல் பிரதமர் பதவிக்கு, தகுதியானவர் அல்ல, அவர் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று சரமாரியாக திரிணாமுல் காங்கிரசின் அதிகாரபூர்வ நாளேடு தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

Positive result in near future, says Mamata Banerjee after meeting Sonia Gandhi - India News

இதுபோல அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், “பிரதமர் மோடியை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியில் முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை.

ராகுலை பிரதமராக்க திரிணாமூல் சம்மதம்

கட்சியின் மூத்த தலைவர்கள் ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள். ஒரு சிலர் மன்மோகன்சிங்கை மீண்டும் நிறுத்தலாம் என்கிறார்கள். இன்னும் சிலர் பிரியங்காவை போட்டியிட வைப்போம் என்று சொல்கிறார்கள். ராகுலுக்கு இன்னொரு முறைதான் வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே என்றும் பேசுகிறார்கள். என்ற போதிலும் ராகுலை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவளித்தது. அவருக்கு கால அவகாசமும் கொடுத்தது.

While Rahul Gandhi campaigns in every other state, he is skipping Bengal. A 'secret' pre-poll alliance with TMC?

மோடிக்கு மாற்று சக்தியாக ராகுலை தயார்படுத்த பலமுறை வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆனால் ராகுலால் அந்த வாய்ப்புகளில் வெற்றி பெற முடியவில்லை. அவர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தவும் தவறி விட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியிலேயே அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு பெரும்பாலான தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

எனவே ராகுலால் ஒரு போதும் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது.மோடிக்கு மாற்று சக்தியாக ராகுல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மோடியை எதிர்க்கும் ஒரே தலைவராக தற்போது மம்தா பானர்ஜி மட்டுமே உள்ளார். ஒட்டு மொத்த நாடும் மம்தாவின் தேசிய அரசியல் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. மம்தா பானர்ஜியை தேசிய தலைவராக ஏற்கவேண்டும். இதற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் கலந்து பேசி முடிவு செய்யப்படும்” அதில் என்று கூறப்பட்டுள்ளது.

இனிக்க இனிக்க பேசி வந்த திரிணாமுல் காங்கிரஸ் இப்படி காலை வாரிவிடும் என்று சோனியா எதிர்பார்க்கவே இல்லை.

At Bengal rally, Rahul Gandhi draws a parallel between Mamata Banerjee and PM Modi - Hindustan Times

இந்த நிலையில்தான் அடுத்த பேரிடி காங்கிரசுக்கு விழுந்துள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த அமரீந்தர் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அங்கு ஏற்கனவே அவருக்கும், மாநில காங்கிரஸ் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வெறுத்துப்போய் அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியே வேண்டாம், ஆளை விடுங்கள் என்று பெரிய கும்பிடாக போட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டார்.

உட்கட்சி பூசல்

இந்த உட்கட்சிப் பூசலுக்கு முக்கிய காரணம் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும்தான். இவர்கள் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அமரீந்தர் சிங்கிற்கு குடைச்சல் கொடுத்து அவரை வெளியேற வைத்துவிட்டனர் என்ற பரபரப்பு பேச்சு அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

Capt Amarinder Singh resigns: Who are the frontrunners to be next Punjab CM - India News

பதவி விலகிய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், “தற்போது நான் காங்கிரசில் நீடிக்கிறேன். எதிர்கால நடவடிக்கை குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வேன். சமீபத்திய நிகழ்வுகள் என்னை அவமானப்படுத்துவதுபோல் உள்ளது. எனக்கு தெரியாமலேயே எம்எல்ஏக்கள் கூட்டத்தை 3 முறை நடத்தி விட்டனர். இது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம். இதனால்தான் பதவி விலக முடிவு செய்தேன். தங்களுக்கு நம்பிக்கைக்குரிய யாரை வேண்டுமானாலும் கட்சி மேலிடம் முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்கட்டும். தகுந்த
நேரம் வரும்போது எனக்கு முன்பாக இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிப்பேன்” என்றார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி இருப்பது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாகும்.

அதுவும் தேர்தல் நேரத்தில் அவர் தனிக்கட்சி தொடங்கினாலோ அல்லது பாஜகவில் சேர்ந்து விட்டாலோ பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிந்துவிடும்.

அதேபோல் மராட்டியத்திலும் ஆளும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே சிவசேனா, தங்களது பாரம்பரிய கூட்டாளியான பாஜகவுடன் கூட்டணி போட்டுவிடும் என்ற தகவலும் சோனியாவின் காதுகளை எட்டி இருக்கிறது.

பிரதமர் கனவில் கெஜ்ரிவால்?

இன்னொரு பக்கம் ஆம்ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்காக 300 யூனிட் இலவச மின்சாரம் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.

Not Worthy If You've To Ask For It': Arvind Kejriwal Sends Clear Message To AAP Members

உத்தரபிரதேசத்திலும் வலுவாக காலூன்ற வேண்டும் என்கிற எண்ணம் அவரிடம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் உபியில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்றி விட்டால் வட மாநிலங்களில் தனது கட்சிக்கு மொத்தமாக 40 தொகுதிகள் வரை கிடைத்து விடும் என்பது அவரது கணக்கு. இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டால் மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமையும். அப்போது பிரதமர் பதவியும் தன்னைத் தேடி வரும் என்பதும் அவருடைய கணிப்பு

இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் ஓட்டுகளை முழுமையாக அறுவடை செய்துவிட்டால் 50 தொகுதிகள் வரை சமாஜ்வாடியால் கைப்பற்றிவிட முடியும் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் நம்புகிறார்.

ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசியும் முஸ்லிம்களின் ஓட்டுகளை குறிவைத்து நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் களமிறங்குவது உறுதி என்கிறார்கள். அதற்கு முன்னோட்டமாக அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய AIMIM கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.

AIMIM chief asaduddin owaisi three day up visit from 7th september begin from ayodhya - असदुद्दीन ओवैसी के लिए भी अयोध्‍या अहम, 7 सितम्‍बर को यहीं से करेंगे तीन दिवसीय यूपी दौरे

இப்படி திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் தற்போது பிரதமர் கனவுடன் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளன. “இதில் திமுகவை தங்கள் பக்கம் இழுத்து போட காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சிகள் இப்போதே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துணை பிரதமர் பதவி தருவதாகவும் அவை கூறுகின்றன”என்று டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ராகுல் இலவு காத்த கிளி?

அப்படியென்றால், கடைசிவரை ராகுல் இலவு காத்த கிளி தானோ? என்ற கவலை சோனியாவை வாட்டத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமின்றி 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து சந்திக்க வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் ஆசையும் இப்போதே பணால் ஆகி விடும்போல் தெரிகிறது!

Views: - 211

0

0