காலத்தின் மீது பழிபோட்ட காலா : அரசியலில் ஈடுபடமாட்டேன் என ரஜினி திட்டவட்டம்!!

12 July 2021, 11:32 am
rajini Health - Updatenews360
Quick Share

வருங்காலத்‌தில்‌ அரசியலில்‌ ஈடுபடப்போகும்‌ எண்ணம்‌ எனக்‌கில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தபிறகு, ரஜினி மக்கள் நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். திடீரென ரஜினிகாந்த் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததால், அரசியல் வருகை தொடர்பாக அவர் முக்கிய தகவலை வெளியிடுவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த சந்திப்பின் போது, அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளையும், அறிவுரைகளையும் அவர் முன்வைத்தார்.

அப்போது, ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ நற்பணி மன்றமாக செயல்படும் என அறிவித்தார். மேலும், வருங்காலத்‌தில்‌ அரசியலில்‌ ஈடுபடப்போகும்‌ எண்ணம்‌ எனக்‌கில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வாகிகளுக்கும்‌, உறுப்பினர்களுக்கும்‌, என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும்‌ வணக்கம்‌. நான்‌ அரயலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள்‌ மன்றத்தின்‌ பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள்‌ மன்ற நிர்வாகிகள்‌ மற்றும்‌ ரகர்கள்‌ மத்தியில்‌ கேள்விக்குறியாக இருக்‌கிறது அதை விளக்கவேண்டியது என்னுடையகடமை.

நான்‌ அரசியல்‌ கட்சி‌ ஆரம்பித்து, அரசியலில்‌ ஈடுபட ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள்‌ மன்றமாக மாற்றி, மாநில அளவிலும்‌. மாவட்ட அளவிலும்‌ பல பதவிகளையும்‌, பல சார்பு அணிகளையும்‌ உருவாக்‌கினோம்‌. கால சூழலால்‌ நாம்‌ நினைத்தது சாத்‌தியப்படவில்லை. வருங்காலத்‌தில்‌ அரசியலில்‌ ஈடுபடப்போகும்‌ எண்ணம்‌ எனக்‌கில்லை.

ஆகையால்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள்‌ எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள்‌ மன்றத்தில்‌ உள்ள செயலாளர்கள்‌, இணை, துணை செயலாளர்கள்‌ மற்றும்‌ செயற்குழு உறுப்பினர்களுடன்‌ மக்கள்‌ நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ நற்பணி மன்றமாக செயல்படும்‌ என்று அன்புடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 119

0

1