‘ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுறேன்’ : சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரித்த தலைவர்…!!!
9 February 2021, 10:53 amசென்னை : சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் கேட்டறிந்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சிறை தண்டனை காலம் முடிந்து பெங்களூரூ சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நேற்று சாலை மார்க்கமாக சென்னை வந்து சேர்ந்தார். அங்கு இளவரசியின் மகளான கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவரை காண ஆதராவளர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர்.
இந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்ததாக தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது :- நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு சசிகலாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். நேற்று சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் உருவாக்கப்படும். அதிமுக பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தான் அதிகாரம் இருக்கிறது. உறவினர் என்னும் முறையில் நான் அவரை பார்க்க வந்தேன்.
நேற்று திரண்ட கூட்டத்தின் மூலம் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளது. வரவேற்பு அளித்த தொண்டர்களுக்கு நன்றி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்கே நகர், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன், எனக் கூறினார்.
0
0