Hello, நான் ரஜினி பேசுறேன்…. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் கமலுக்கு சூப்பர் ஸ்டார் போட்ட போன் கால்..!!

Author: Babu Lakshmanan
23 November 2021, 4:15 pm
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாளொன்று சராசரி பாதிப்பு 800-ஐ விடக் குறைந்துள்ளது. இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது அவரது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மருத்துவமனையில் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

UpdateNews360 செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

UpdateNews360 செய்திகளை Google News-ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் பின் தொடர

ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Views: - 307

0

0