‘வாழ்த்து சொன்னது ஒரு குத்தமாயா’ : மூத்த தலைவர்களை ஒதுக்கி உதயநிதிக்காக வரிந்து கட்டும் தி.மு.க…!

5 September 2020, 4:15 pm
rs-bharathi--rajini-updatenews360
Quick Share

நீண்ட நாட்களுக்குப் பிறகு தி.மு.க.வில் நிரப்பப்படாமல் இருந்த முக்கிய இரு பொறுப்புகள் அண்மையில் நிரப்பப்பட்டன. தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க.வின் முக்கிய இரு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரு தலைவர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினிகாந்த் அமைதியாக இருந்தாலும் பிரச்சனை, வாய் திறந்தாலும் பிரச்சனை என்பது பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது, தி.மு.க.வில் புதிய பொறுப்புகளை பெற்ற இரு மூத்த தலைவர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததையும் திமுகவினர் ஒரு சர்ச்சையாக உருவாக்கியுள்ளனர்.

அதாவது, தி.மு.க.வின் மூத்த தலைவர்களான துரைமுருகனுக்கும், டி.ஆர். பாலுவுக்கும் வாழ்த்துக் கூறிய ரஜினி, தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற செய்தி பரவலாக உலா வந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க., எம்.பி., ஆர்.எஸ். பாரதி, “நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தாலும், வாழ்த்து தெரிவிக்காமல் போனாலும் தி.மு.க.விற்கு கவலை இல்லை. துரைமுருகன், டி.ஆர்.பாலுவை ரஜினி வாழ்த்தியதால் தி.மு.க.வுக்கு எந்த வரவும் வரப்போவதில்லை. ரஜினி வாழ்த்தாததால் தி.மு.க.வுக்கு எந்த செலவும் இல்லை.,” எனக் கூறியிருந்தார்.

ஆர்.எஸ். பாரதியின் இந்த கருத்திற்கு ரஜினி ரசிகர்கள் தி.மு.க.வை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒருவருக்கு வாழ்த்து தெரிவிப்பதும், தெரிவிக்காததும் அவரவர் விருப்பம்… அதனை கேட்டு வாங்குவது அசிங்கமான ஒன்று என சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், ‘தலைவர் (ரஜினி) வாழ்த்து சொல்லும் அளவிற்கு நீங்க (உதயநிதி) இன்னும் வளரனும் தம்பி,’ எனவும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

மேலும், துரைமுருகன், டி.ஆர். பாலு ஆகியோர் நண்பர்கள் என்பதால் ரஜினி வாழ்த்து கூறியதாக ஆர்.எஸ். பாரதி கூறியதை வரவேற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0