ராஜ்ய சபா எம்.பி.க்களாக பதவியேற்ற தி.மு.க., எம்.பி.க்கள்..!

14 September 2020, 5:17 pm
trichy siva - updatenews360
Quick Share

டெல்லி : மாநிலங்களவை எம்.பி.க்களாக திருச்சி சிவா உள்பட 3 தி.மு.க. எம்.பி.க்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பலத்த மருத்துவ பாதுகாப்புடன் இன்று தொடங்கியது. அக்.,1ம் தேதி வரை விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை நடவடிக்கைகள் செயல்படும் காலம் மட்டும் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது, காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும்.

தனிநபர் மசோதாவும் இல்லை, கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. கேள்வி நேரத்திற்கு பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தி.மு.க. சார்பில் தேர்வான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

Views: - 4

0

0