20% இடஒதுக்கீடு விவகாரம்… ராமதாஸ் – முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்திப்பு : சுக்குநூறான ஸ்டாலினின் பிளான்..!!
6 February 2021, 12:46 pmசென்னை : வன்னியர்களுக்கான 20 % இடஒதுக்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று மாலை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாமக கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கவே இந்த சந்திப்பு நடப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. மேலும், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என பாமக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசை சந்தித்து முறையிடுவது என்றும், அந்த பேச்சுவார்த்தையை பொறுத்தே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 3ம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் குழு மற்றும் பாமக நிர்வாகிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையின் நிலவரம் தொடர்பாக அமைச்சர்கள் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கையோடு சந்தித்து பேசியது.
இந்த நிலையில், வன்னியர்களுக்கான 20 % இடஒதுக்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று மாலை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் கோரிக்கை தொடர்பான இதுவரையில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு கட்சியின் மூத்த தலைவர்களையும், மகன் அன்புமணியையும் மட்டுமே அனுப்பி வைத்து வந்தார் ராமதாஸ்.
இன்று அவரே களத்தில் இறங்கியிருப்பது ஏறத்தாழ இடஒதுக்கீட்டிற்கு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவும், இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையின் இறுதி வடிவம் கொடுப்பதற்காகவே ராமதாஸ் இந்த சந்திப்பை மேற்கொள்ள இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்து விட்ட நிலையில், தற்போது பாமகவும் கூட்டணிக்கு இசைவு தெரிவிக்க இருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திமுக கூட்டணியில் ஏறத்தாழ டசன் கணக்கிலான கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அவற்றில் இதுவரையில் எந்த கட்சியுமே கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், அதிமுக அடுத்தடுத்து முக்கிய கட்சிகளுடன் சுமூகமாக கூட்டணியை உறுதி செய்திருப்பது ஸ்டாலினுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விசிக, மதிமுகவை வெளியே அனுப்பி விட்டு, பாமகவை உள்ளே இழுத்து தேர்தலை சந்திக்கவிருந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்களின் திட்டத்திலும் இடி இறங்கியது போல் ஆயிற்று…!!
0
0