தமிழகத்தில் கொரோனா குறைந்ததற்கு இதுதான் காரணம் : இனியும் தொடரனும்…. ராமதாஸ் பாராட்டு!!

Author: Babu Lakshmanan
13 October 2021, 11:46 am
ramadoss - corona - updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் 164 பேருக்கும், கோவையில் 137 பேருக்கும், செங்கல்பட்டுவில் 104 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,814 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,421 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 29 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1300-க்கும் கீழாக 1289 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சென்னையில் 164 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ந்து 17 -ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிச்சயமாக நிம்மதியளிக்கும் செய்தியாகும்!

தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள். அனைவரின் பணியும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 474

0

0