குளிர்பானம் என நினைத்து மதுபானத்தை குடித்த குழந்தையும், தாத்தாவும் இறப்பு : இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா? ராமதாஸ் ஆவேசம்

Author: Babu Lakshmanan
4 October 2021, 11:35 am
ramadoss - tasmac - updatenews360
Quick Share

சென்னை : குளிர்பானம் என நினைத்து மதுபானத்தை குடித்த குழந்தையும், தாத்தாவும் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மதுக்கடைகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பாகுட்டை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (62) என்னும் கூலி தொழிலாளிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் டாஸ்மாக்கில் இருந்து மதுவாங்கி வந்து தனது வீட்டில் வைத்து அருந்தியுள்ளார். அப்போது, அவர் வாங்கி வந்த முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை சாப்பிட அவரது பேரன் ரித்திஷ் (5) வந்துள்ளார். குழந்தை தின்பண்டங்கள் சாப்பிடுவதை பார்த்து விட்டு, தான் அருந்தியது போக மீதி மதுவை அங்கேயே வைத்து விட்டு, டிவி பார்க்கச் சென்றுள்ளார் சின்னசாமி.

அப்போது, மதுபானத்தை குளிர்பானம் என நினைத்து எடுத்துக் குடித்த சிறுவனுக்கு கடுமையான இருமல் ஏற்பட்டது. இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த பெற்றோர், சின்னசாமியை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னசாமி மற்றும் அவரது பேரன் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குளிர்பானம் என்று நினைத்து மதுபானத்தை குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மீண்டும் மது விற்பனைக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வேலூர் மாவட்டம் திருவலத்தில் தவறுதலாக மது குடித்த குழந்தையும், தாத்தாவும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மது கொடுமையிலும் கொடுமை; இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா? மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது? மக்கள் நிம்மதியாக வாழ்வது எப்போது?,” எனக் குறிப்பிட்டார்.

Views: - 299

0

0